வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடித்தனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நேற்று காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதனால், அதற்கு முன்பு திருமண சடங்கள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மணக் கோலத்தில் மணமகள் மன மேடைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் முகூர்த்தத்திற்கு நேரமாகியும் மணமகன் மன மேடைக்கு வரவில்லை.
சந்தேகமடைந்த உறவினர்கள் மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவரது தொலைப்பேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், இரு வீட்டாரின் உறவினர்களும் மணமகனை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனிடையே தாலி கட்டும் நேரத்தில் மணமகன் காணாமல் போனதால், அதிர்ச்சியில் மணமகள் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து மணமகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறுதியாக முகூர்த்த நேரம் முடிந்தால் திருமணமும் நின்று போனது. கடைசி நேரத்தில் மணமகன் காணாமல் போனது இரு வீட்டாரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.