
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய ஆளுநர் வந்த நிலையில் திடீரென ஜெனரேட்டர் அறையில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை தந்திருந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக காரில் இருந்து இறங்கி அவர் உள்ளே சென்றார். அப்போது கோயில் நிர்வாகிகள் தரப்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் நீராடி, சாமி தரிசனம் செய்ய உடை மாற்றுவதற்காக அறைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த ஜெனரேட்டர் அறையில் இருந்து திடீரென புகை கிளம்பியது. உடனடியாக அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மின்கசிவால் புகை வெளியானது தெரிந்தது. ஆளுநர் அடியெடுத்து வைத்ததும் திடீரென புகை கிளம்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.