Skip to main content

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு -சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கலாகிறது!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

government schools students medical new bill tn assembly

 

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (14/09/2020) கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

 

இரண்டாவது நாளாக இன்று (15/09/2020) மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகள் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது. இந்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்கிறார்.

 

இதனிடையே, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாஸ்க் அணியாவிடில் அபராதம் என்ற மசோதாவும் தாக்கலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்