Published on 29/04/2020 | Edited on 29/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சர்வீஸ் செய்யும் விற்பனையகங்களை திறந்து வைக்கலாமா? என்பது குறித்த வழக்கில் தமிழக அரசு மே 25ஆம் தேதி பரிசீலித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் சர்வீஸ் விற்பனையகங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.