Skip to main content

ஒரே நாளில் 2,516 பேருக்கு கரோனா தொற்று!! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்வு!!!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
கரத

 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2,516 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்படி, 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆவது நாளாக சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,227 பேர் தமிழகம் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக அதிகரித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்