எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அரசு யாருக்கும் அடிப்பணிந்து செயல்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,
கேள்வி: எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றி வருகிறார் என்றால் என்ன அர்த்தம்? யாருக்கு அடிபணிந்து இப்படி செயல்படுகிறீர்கள்?
பதில்: அப்படி யாருக்கும் அடிப்பணியும் அவசியம் அரசுக்கு இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவே வழக்கு பதிவு செய்யபட்டு எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் திணறிய அவர் மழுப்பலான பதிலை கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.