உலகில் வாழும் மக்களை இணைக்கும் உறவு தான் "சமூக வலைதளங்கள்" ஆகும். இதில் உலகெங்கும் வாழும் நம் தெரிந்த நண்பர்கள் , தெரியாதவர்கள் உட்பட அனைவரிடமும் பேசி வருகிறோம். சமூக வலைதளங்களால் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் , புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , பாரம்பரிய விழாக்கள் , கல்வி குறித்த செய்திகள் , அரசியல் செய்திகள் உட்பட அனைத்து மொழிகளிலும் காண்பதோடு , செய்திகளை படித்து வருகிறோம். சமூக வலை தளங்களில் முக்கிய பங்கை வகிப்பது "பேஸ்புக்" (Facebook) ஆகும். இந்த வலைதளம் பயன்படுத்தும் நபர்களின் அறிவை வளர்க்க வழிவகை செய்கிறது. "FACEBOOK" சமூக வலை தளத்தை பயன்படுத்தி பெரும்பாலனோர் தனது வளர்ச்சிக்கு தேவையானதை எடுத்துக்கொண்ட போதிலும், சிலர் மட்டும் தவறாக பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர் என்கிற உண்மை எவராலும் மறுக்க முடியாதது. இதில் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பேஸ்புக்கில் தெரியாத நபர்களின் பழக்கத்தால் பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என்பதை அனைவராலும் காண முடிகிறது. இந்திய அளவில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது சமூக வலைதளங்களால் அதிக அளவில் நடைப்பெறுகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் போலி கணக்குகள் தொடங்கி மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருவது வருத்ததிற்குரியது.
சமூக வலை தள நிறுவனங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
1.பேஸ்புக் , வாட்ஸ் ஆப் , டிவிட்டர் (Facebook, Whatsapp, Twitter) உள்ளிட்ட பல சமூக வலை தள நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.
2. இதில் பெண்கள் சமூக வலை தளங்களில் தனக்கென்று தொடங்கப்படும் கணக்குகளில் குறிப்பிடும் விவரங்கள் முழுவதையும் மறைத்து வைக்கும் வகையில் ஒரு புதிய மென்பொருள் உருவாக்க உத்தரவிட வேண்டும். இதனை தொடர்ந்து பெண்கள் போட்டோக்கள் , வீடியோக்கள் பதிவிடுவதை தடுக்கும் வகையில் மென்பொருள் உருவாக்க வேண்டும்.
3. பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதை சமூக வலை தள நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
4. சமூக வலை தளத்தை பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அந்தந்த சமூக வலை தள நிறுவனங்களே பொறுப்பு என்பதன் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
5.மேலும் போலி கணக்குகளை சமூக வலை தளங்களில் தொடங்கப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக வலை தளங்களுக்கென்று புதிய சட்டத்தை மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்.
6. சமூக வலை தளங்களை கண்காணிக்க சமூக வலை தளங்களுக்கென்று தனி அமைச்சரவை இலாக்காவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சமூக வலை தள குற்றங்களை பெருமளவில் குறைக்கலாம். இந்த வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கையாண்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசடி குற்றங்கள் முழுமையாக குறைக்கலாம் .
கூகுல் பிளே ஸ்டோரில் கிடக்கும் குப்பைகள் !
சமுதாய இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தேவையற்ற செயலிகள் கூகுல் பிளே ஸ்டோரில் (Google Play Stores) காணப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் "TIKTOK" செயலியால் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அறிந்துள்ளனர். ஆபாச செயலிகளும் இந்த பிளே ஸ்டோரில் இடம் பெற்றுள்ளதால் , இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது? மேலும் இது குறித்து மத்திய அரசு கூகுல் நிறுவன அதிகாரிகளை அழைத்து இது போன்ற தேவையற்ற செயலிகள் உட்பட அனைத்தையும் உடனடியாக நீக்க கூகுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது தான் இளைஞர்களின் எதிர்காலம் செம்மையாக இருக்கும். சமுதாய வளர்ச்சி மிக வேகமாக நடைப்போடும்.
இணையதளம் ஒவ்வொருவரின் அறிவியல் வளர்ச்சி மற்றும் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் கூகுல் பிளே ஸ்டோரில் ஆபத்தான விளையாட்டு மென்பொருளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுவர்கள் இந்த செயலிக்கு அடிமையாவதையும் காண முடிகிறது. எனவே கூகுல் நிறுவனத்தை அழைத்து பேசி இது போன்ற தேவையற்ற செயலியை உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். சமூக வலை தள பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இது உலகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே ஐநா மன்றமும் சமூக வலை தளங்கள் தொடர்பான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பி . சந்தோஷ் , சேலம்