விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அறிவுரை கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம் காவல்நிலைய சரகங்களுக்கு உட்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா பற்றிய சிலை நிறுவனர்கள் கூட்டுக்கூட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நேற்று மாலை உசைனியா மஹாலில் கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற 25.08.17 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த வருடங்களில் வைக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை.
விநாயகர் சிலை அமைக்கப்படும் மேற்கூரை ஆஸ்பட்டாஸ் சீட் மற்றும் துத்தநாக தகடால் அமைக்க வேண்டும் ஓலை கீற்று கொண்டு அமைக்க கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மது அருந்தகூடாது. பிறமதத்தினர் வாழும் பகுதிக்கு செல்லகூடாது. காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செல்ல் வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கவோ, பிறமதத்தினரை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பகூடாது.
விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை விஜர்சனம் செய்தல் ஆகியவற்றில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனை இன்றி அமைதியான முறையில் நடத்தப்படுவதற்க்கு காவல்துறையினருடன் சிலை அமைப்பாளர்கள் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பின்பற்றவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகவதி, எஸ்.ஐ மாடசாமி மற்றும் திருப்புல்லாணி, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
-பாலாஜி