Published on 20/04/2019 | Edited on 20/04/2019

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.