Published on 15/01/2019 | Edited on 15/01/2019

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலிருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ முதல் சுற்றில் 75 பேர் களத்தில் உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 636 காளைகள் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.