கடந்த மாதம் 25 ஆம் தேதி காலை 4 மணிக்கு கோவையில் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டில் விசாரணை நடத்திய போலீசார் விசாரணையின் முடிவில் அவரை கைது செய்து சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னும் அதிமுகவின் கொடி, லெட்டர் பேட், இணையத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி அதிமுகவில் உள்ளதுபோல தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அதன்பின் அவரை பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், என்னை சிறையில் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. இன்னும் நான் உறுதியாக இருப்பேன். 100 முறை சிறைவைத்தாலும் நான் அதிமுகதான். வேறு கட்சிக்கு செல்லமாட்டேன். முன்பைவிட அதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன் என்றார்.