சென்னை செம்மொழி பூங்காவில் மலர்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தற்பொழுது தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் நான்காவது சென்னை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தமிழக முதல்வர் இன்று துவங்கி வைத்துள்ளார். இதற்காக செம்மொழி பூங்காவை பார்வையிட்ட முதல்வர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சுமார் 800க்கும் அதிகமான மலர்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சிக்காகவே பல இடங்களில் இருந்து மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஊட்டி, கோவை, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தனித்துவமான மலர்கள் கொண்டுவரப்பட்டு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 வகையான மலர்களும் 15 லட்சம் தொட்டிகளும் 20 வகையான வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு கட்டணமாக 150 ரூபாயும், சிறியவர்களுக்கு கட்டணமாக 75 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி நுழைவுச்சீட்டை mhorticulture.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.