Published on 04/05/2019 | Edited on 04/05/2019
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது கோசானம் என்ற கிராமம். இங்கு கடந்த 3 மாதமாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் செயல்பட்டு வந்தது. இன்று காலை திடீரென அந்த டாஸ்மாக் கடையில் இருந்து வெடிச்சத்தமும் நெருப்பும் வெளிவரத் தொடங்கியது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இதை கண்ட மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு ஊழியர்கள் வந்து எரிந்த தீயை அனைத்தனர். இருப்பினும் சுமார் ரூ 60 லட்சம் மதிப்புள்ள டாஸ்மாக் சரக்குகள் தீயில் எரிந்து நாசமாகியது. இது மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா ? அல்லது யாராவது டாஸ்மாக் கடைக்கு தீ வைத்தார்களா என்று நம்பியூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.