ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த குட்டியம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்கள் ரேசன் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆய்வுக்கு சென்றபோது திடீரென நியாய விலைக் கடையில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு தரம் குறைவாக உள்ளதை ஆய்வு செய்த ஆட்சியர் உடனடியாக அதனை மாற்றி தரமான பருப்பை விநியோகம் செய்ய விற்பனையாரை கண்டித்து அறிவுறுத்தினார்.
அதற்கு விற்பனையாளர் அங்கு கொடுப்பதே இப்படிதான் உள்ளது என கூறினார். அதற்கு ஆட்சியர் குடோனில் எடுக்கும்போதே இப்படிப்பட்ட தரம் குறைந்த பொருட்களை வாங்காமல் வந்திருக்க வேண்டும் என்றார். மேலும் நியாய விலைக் கடையில் பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அன்பரசன், தாசில்தார் இந்துமதி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.