Skip to main content

மோசடியில் ஈடுபட்ட பெண் பல் மருத்துவர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Female dentist involved in fraud

 

திருச்சியைச் சேர்ந்த பல் மருத்துவர் செளமியா, திருச்சி ஆண்டாள் வீதியில் மருத்துவமனை நடத்திவருகிறார். இந்நிலையில், தென்னூர் அண்ணா நகரைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் தனது மருத்துவமனையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அசோக்கும் அதற்கு சம்மதித்து 24 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். லாபமாக இரண்டு மாதங்கள் மட்டும் பணத்தை சௌமியா அசோக்கிடம் வழங்கியுள்ளார்.

 

பின்னர் லாபத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து அசோக் பணத்தைக் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. பணத்தை செளமியா திருப்பித் தராததால் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், டாக்டர் செளமியா மற்றும் அவரது தந்தை காமராஜ், சகோதரர் நவநீத் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்