Published on 06/12/2020 | Edited on 06/12/2020

விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8- ஆம் தேதி நடைபெறவுள்ள 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு தி.மு.க. தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, பாரிவேந்தர், வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு விவசாயிகளுக்கு எவ்வித நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது என அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருதுகிறோம். அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக துணை நிற்கும் குரலாக இருப்போம். போராட்டம் முழு வெற்றி அடைய விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.