Skip to main content

ரோட்டில் நெல்லைக் கொட்டி விவசாயி போராட்டம்...!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

villupuram -

 

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை, இவர் தனது நிலத்தில் விளைந்த சுமார் 40 மூட்டை நெல்லை அறுவடை செய்து வாகனத்தின் மூலம் கடந்த 18- ஆம் தேதி திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.879 என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். 

 

இதனால் விரக்தி அடைந்த ஏழுமலை தனது 40 நெல் மூட்டைகளையும் திருவெண்ணைய் நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று வட்டாட்சியர் அலுவகம் முன்பு  நடுரோட்டில் நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.  தகவலறிந்த வட்டாட்சியர் வேல்முருகன், விழுப்புரம் டி.எஸ்.பி. வசந்த ராஜ், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயி ஏழுமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படி நாளை வெளியூரிலிருந்து வியாபாரிகளை வரவழைத்து அதிக விலைக்கு ஏழுமலையின் நெல்லை விற்பனை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

 

அதனையடுத்து ரோட்டில் கொட்டிய நெல்லை மீண்டும் வண்டியில் ஏற்றிச் சென்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  வைத்துள்ளார். ஏழுமலையின் இந்தப் போராட்டமும் அவரின் நிலையம் கண்டு அங்கிருந்த மக்கள் சற்று வருத்தம் அடைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்