Skip to main content

பொதுமக்கள் மத்தியில் விவசாய சங்க தலைவரை தாக்கிய காவல்துறை; கண்டித்த அழகிரி!!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

farmer union leader attacked by police, alagiri condemned

 

காட்டுமன்னார்கோவில் வீரனந்தபுரம் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்றுவது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு ஆதரவாக வீடுகளைக் காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என மக்களுக்குக் குரல் கொடுத்த காங்கிரஸ் பிரமுகரும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான இளங்கீரனுக்கும், காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதில் இளங்கீரனை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரவுடியைப் பிடித்து இழுப்பது போல் இழுத்து, தாக்கி வண்டியில் ஏற்றினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட இளங்கீரன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரனை செய்து வருகிறார்கள். ஏழை மக்களுக்காகக் குரல் கொடுத்த விவசாய சங்கத் தலைவரை, பொதுமக்கள் மத்தியில் ரவுடியை இழுத்து செல்வது போல் இழுத்துச்சென்ற காவல்துறையின் செயல்பாடு அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

farmer union leader attacked by police, alagiri condemned

 

ஏழை மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு இதுதான் நிலமையா? என்று அப்பகுதியில் உள்ளவர்கள் வேதனைக் குரல் எழுப்புகிரார்கள். கடந்த பொங்கல் தினத்தன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாய சங்கத்தலைவருடன் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிய போது, கடலூர் மாவட்டத்தில் இருந்து இவரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழுகிரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் அவர்கள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்காக போராடி வருபவர்.

 

ஒரு பொது நோக்கிற்காக அவர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிந்து பேசும்போது காட்டுமன்னார்கோயில் காவல்துறை அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பொது வாழ்க்கையில் இருப்பவர், விவசாய சங்கத் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர், பொதுநோக்கிற்காக சென்றவரை காவல்துறை அதிகாரிகள் கைநீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்தப் பகுதி விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாகப் போராடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்