பால் உற்பத்தியாளர்கள் வறுமையிலும், கடும் வறட்சியிலும் சிக்கித்தவித்து வருகிறார்கள். இருப்பினும் கால்நடைகளுக்கு தீவனங்களை வாங்கிப்போட்டு, பாலை உற்பத்திச்செய்து வருகிறார்கள். அந்த பாலை கட்டுப்படியாகாத விலைக்கு விற்பனை செய்து வந்தனர். பால் உற்பத்திச் செலவு பெருமளவு உயர்ந்து விட்டதால் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து பெரும் இடர்பாட்டிற்கு ஆளாகிவிட்டனர். பால் உற்பத்தியை மட்டுமே நம்பி வாழ்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட இந்த சூழ்நிலையில் தமிழக அரசு பால் விலையை உயர்த்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது மட்டும் அல்ல வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
இதனால் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல நுகர்வோருக்கும் தட்டுப்பாடு இன்றி தரமான பால் கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் பால் உற்பத்தியாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன். அதோடு மட்டும் இல்லாமல் தற்போது நாட்டு மாட்டு பால் மட்டும் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு கோவை, சேலம், நாமக்கல், ஓசூர் என இன்றும் வாங்கி வருகின்றனர். ஆனால் அந்த பாலை விவசாயிகளிடமிருந்து 60 ரூபாய்க்கு பெற்று தனியாக விற்பனை செய்து வருகின்றனர். அதை ஆவின் நிர்வாகமே தனியாக வாங்கி எருமை பாலை விற்பதை போலவே, இதையும் தனியாக தரம் பிரித்து விற்பனை செய்தால் இன்னும் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்.
அரசே நாட்டு மாட்டியின் சானம் உரமாகவும், அதன் மூலாக மண்புலு வளர்க்கவும், அதன் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன் படுத்தபடுகிறது. என்று சொல்லி அரசே ஏழைகளுக்கு வழங்கும் பசுக்களை நாடுமாடுகளா கொடுக்கவில்லை, அதை நாட்டுமாடுகளாக கொடுத்தால் இன்னும் தரம் உயரும். அதே போல நம் நாட்டின் பாரம்பரியும் பாதுகாப்படும். பால்விலை உற்பத்தியாளர் என்ற முறையிலே இதை நான் சொல்லியிருக்கிறேன் அதே போல இந்த அரசு பால் மாணியம் கோரிக்கை வருவதற்கு முன்தாக கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.