Published on 09/01/2020 | Edited on 09/01/2020
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2- ஆம் போக கடலை மற்றும் எள் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்பவானி வாய்க்காலில் 12 டிஎம்சியும், காலிங்கராயன் வாய்க்காலில் 5.12 டி.எம்.சி நீரும் இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படுகிறது.
அதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.33 அடியாகவும், நீர் இருப்பு 84.71 டி.எம்.சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 1,168 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு 10,000 கனஅடியாக இருக்கிறது.மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.