Skip to main content

இபிஎஸ், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

EPS, Governor RN Ravi will visit Delhi today

 

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது.  இருப்பினும் நேற்று முன்தினம் ஓபிஎஸ் நடத்திய மாநாடு கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

மேலும் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் எங்களுக்கு பொருட்டல்ல மேலே இருக்கக்கூடிய தேசிய தலைமையுடன்  நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்ட ஆளுநர் மூன்று நாள் பயணமாக சென்றுள்ள நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை  டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலித்து ஏமாற்றிய இளைஞர்; முகத்தை சிதைத்த இளம்பெண்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
young woman who threw liquid on the face of boyfriend in delhi

டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகார் பகுதியில் வசிப்பவர் ஓம்கார்(24). கிராபிக் டிசைனராக இருக்கும் ஓம்காருக்கும், அவருடன் பணி செய்த 30 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் காதலி, ஓம்காரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு வயதை காரணம் காட்டி காதலியை ஓம்கார் நிராகரித்துள்ளார். 

இதனால், மனம் உடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய ஓம்காரை பலிவாங்க முடிவு செய்து, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து கூலிப்படையை அமர்த்தியுள்ளார். ஓம்கார் முகத்தில் திரவத்தை(ஆசிட்) ஊற்றி சிதக்க வேண்டும் என்று அவர்களிடம் காதலி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த ஓம்காரை கூலிப்படையினர் வழிமறித்து முகத்தில் திரவத்தை ஊற்ற முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால், கையில் வைத்திருந்த கைத்தியை எடுத்து ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கிழித்து சிதைத்துள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த ஓம்காரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தனர். பின்னர் ஓம்கார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்பு கூலிப்படையை சேர்ந்த விகாஷ்,பாலி, ஹர்ஷ்,ரோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓம்காரின் காதலிதான் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஓம்காரின் காதலியை கைது விசாரணை நடத்தியபோது, “நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு ஓம்காரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து நான் எதிர்ப்பு தெரிவித்தால், தன்னுடன் எடுத்துகொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் அவரை பழிவாங்க கூலிப்படையை அமைத்தேன்” எனத் தெரிவித்தார்.

Next Story

'கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு' - ஆளுநர் பேச்சு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
'kallakurichi incident is a dark incident'-Governor's speech

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

நேற்று தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்த நிலையில் இன்று அதிமுக தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்திருந்தனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில்  போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.  கள்ளக்குறிச்சியில் நடந்தது ஒரு இருண்ட நிகழ்வு. போதைப் பொருள் புழக்கம் குறித்து இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படித் தெரியாமல் உள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை கஞ்சா மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையிலேயே விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கூறுகின்றனர். பெற்றோர் உள்ளிட்டோர் கூறுவதைக் ஏற்காமல் போதைப் பொருள் இல்லை எனக் கூறி வருகின்றனர். சிந்தடிக் போதைப் பொருள்கள் உள்ளதாக பெற்றோர் கூறும் நிலையில் அதிகாரிகளுக்கு இதையெல்லாம் எப்படி தெரியாமல் உள்ளது. போதைப்பொருட்கள் புழக்கம் இருந்தும் இல்லை என அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்றால் அதில் ஏதாவது நோக்கம் இருக்கும்'' என்றார்.