திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு கிராமத்துக்கு அருகில் காப்புக்காட்டு பகுதி உள்ளது. இதனை ஒட்டி பலரின் விவசாய நிலங்களும் உள்ளன.
இந்நிலையில் டிசம்பர் 22ந்தேதி காலை அப்பகுதியை சேர்ந்த தினேஷ், கோதண்டராமன், வெங்கடேசன் ஆகியோர் தங்களது நிலத்துக்கு சென்றுள்ளனர். தங்களது நிலம் அங்கு பாழ்ப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். நிலத்தில் யானைகளின் கால்தடங்கள் இருப்பதை பார்த்து கவலையடைந்தனர்.
டிசம்பர் 21ந்தேதி இரவு இந்த நிலங்களுக்குள் வந்த யானைகள் நிலத்தில் பயிர் செய்துயிருந்த தக்காளி தோட்டத்தில் புகுந்து சாப்பிட்டுவிட்டு, அருகில் இருந்த வாழை தோப்புக்குள் புகுந்து நாசம் செய்துவிட்டு சென்றுள்ளன.
இதுப்பற்றி உமராபாத் காவல்நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். தங்களது ஊர் பகுதியில் காப்புக்காட்டு பகுதி திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் வருகிறதா, வேலூர் மாவட்ட எல்லைக்குள் வருகிறதா எனத் தெரியாமல் குழம்பி வனத்துறையினருக்கு தகவல் சொல்ல முடியாமல் தவித்தனர். தற்போது வேலூர் மாவட்ட வனத்துறை எனச்சொல்ல அங்கு தகவல் கூறியுள்ளனர்.
இரவு வந்தது போல் இன்றிரவு யானைகள் விவசாய நிலத்துக்குள் வராமல் வனத்துறையினர் தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.