Skip to main content

பிப்.8 ஆம் தேதி துவங்குகிறது 'யானைகள் நலவாழ்வு முகாம்' 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

elephant

 

பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த, கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி என்ற இடத்தில், 48 நாட்கள் யானைகள் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடக்கும் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்கும் கோவில் யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு யானைகளுக்கு கரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழைப் பெற்ற பிறகே யானைகள் முகாமிற்கு அனுப்பப்படும்.

 

யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்படும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். நலவாழ்வு முகாமில் பங்குபெறும் யானைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. நோயுற்ற, தொற்று நோய் பாதித்த யானைகளை முகாமிற்கு கொண்டுவர தேவையில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில்,பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடக்கும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் பிப்ரவரி 8 ஆம் தேதி  காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் துவங்கவுள்ளது. முகாமில் அறநிலையத்துறை கோவில்கள், திருமடங்கள், புதுச்சேரி கோவில் யானைகள் பங்கேற்க உள்ளன. யானைகளை அழைத்துவரும் வழியில் உள்ள மின்கம்பிகளைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாக கொண்டுவர வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்