தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறயிருக்கிற நிலையில் 9-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலையடுத்து அரசியல் கட்சி பிரமுகா்களும், சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்வதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதில் குமாி மாவட்டத்தில் முதல் கட்ட தோ்தல் மாவட்ட பஞ்சாயத்து வாா்டுகள், ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், ஊராட்சி தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 519 பதவிகளுக்கும் இரண்டாம் கட்ட தோ்தலில் இதேபோல் 465 பதவிகளுக்கு தோ்தல் நடக்கிறது. இதற்காக 104 இடங்களில் வேட்புமனுக்கள் 16-ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படுகிறது.
இதில் மொத்தமுள்ள 518110 ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்காளா்களில் முதல் கட்டத்தோ்தலில் 288812 வாக்காளா்களும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 229298 வாக்காளா்களும் வாக்களிக்கின்றனா். ஊரக உள்ளாட்சி தோ்தலில் தமிழகத்தில் முதல்முறையாக முதல் கட்டத்தோ்தல் நடக்கும் மேல்புறம் ஊராட்சியில் ஒன்றியத்திற்குட்பட்ட 114 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதில் முதல் கட்டத்தோ்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகளும், இரண்டாம் கட்டத்தில் 70 வாக்குச்சவடிகளும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு மைக்ரோ அப்சா்வா் நியமனம், வீடியோ பதிவு, வெப்கேம் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம்பெறும் என மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா கூறினாா்.