Published on 17/04/2022 | Edited on 17/04/2022

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றிக் கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும, கிறித்துவ பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள்!
கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானைப் போற்றும் இன்னாளில், வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும், ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.