Skip to main content

பழனி முருகனை தரிசித்த துர்கா ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

கந்தசஷ்டியை முன்னிட்டு முருக பக்தர்கள் விரதமிருந்து ஆறுபடை கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்து வருகிறார்கள்.அதுபோல் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலினும் பழனி முருகனை தரிசிப்பதற்காக கோவையில் இருந்து நேற்று இரவு பழனிக்கு வந்து தங்கி இருந்தவர் அதிகாலையில் பழனி முருகனை தரிசிக்க விஞ்சு மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றார். 
 

durga stalin and premalatha vijayakanth visits palani temple


அப்பொழுது கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார் அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பழனி மூலவரான நவபாஷான முருகனை தரிசனம் செய்ததுடன் மட்டுமல்லாமல் குடும்பத்தாரின் பெயருக்கு அர்ச்சனை செய்தார். அதன்பின் மலைக் கோவிலில் உள்ள போகர் சன்னதியில் சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார் அதன் பின் மலைக் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். 

இப்படி  கந்த சஷ்டியை முன்னிட்டு பழனி முருகனை தரிசிக்க வந்த துர்கா ஸ்டாலினை பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ பி செந்தில்குமார் அவரது மனைவி அருள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். 

அதுபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் மாநில பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்தும் கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தரிசிப்பதற்காக இன்று காலையில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து விட்டு சென்றார்.
 

durga stalin and premalatha vijayakanth visits palani temple


அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேமலதா "தலைவர் கேப்டன் விரைவில் பழைய கம்பீரத்துடன் வருவார் கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து ஆறுபடை முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன். அதன்படி  பழனி கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்தேன். தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவேன்" என்று கூறினார்.

இப்படி முருகனை தரிசிக்க வந்த பிரேமலதாவுடன் மேற்கு மாவட்ட செயலாளர் பாலு என்ற பாலசுப்ரமணி உள்பட சில நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார். 

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்