Skip to main content

வருமானவரித்துறைக்கு தகவல் தந்தது யார்? கண்டறிந்துவிட்டாரா துரைமுருகன் ?

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 


கடந்த வாரம் திமுக பொருளாளரும், வேலூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் கதிர்ஆனந்த் அப்பாவுமான துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் நள்ளிரவில் ரெய்டு செய்தனர். அவரது வீடு மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான வேலூர் மேற்கு மாவட்ட முன்னால் மா.செ தேவராஜ் வீடு, குடியாத்தம் சக்கரவர்த்தி வீடுகளில் ரெய்டு செய்தனர். துரைமுருகன் வீட்டில் இருந்து மட்டும் 10 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்தது.

 

d

 

இந்நிலையில் இன்று ஏப்ரல் 1ந்தேதி காலை முதல் கதிர்ஆனந்த் நடத்தும் பொறியியல் கல்லூரி, துரைமுருகன் ஆதரவாளரும், முன்னாள்  பகுதி கழக செயலாளருமான சீனுவாசன் வீடு, கி.செ பெருமாள் வீடு, துரைமுருகன் உதவியாளர் அஸ்கர்அலி வீடு என 8 இடங்களில் ரெய்டு செய்கிறது வருமானவரித்துறை. இந்த ரெய்டுகள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன. இன்னும் ரெய்டு முடியாததால், முடிந்தபின்பே உண்மை என்ன என்பது தெரியவரும்.

 


திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் களத்தில் உள்ளார். எதிர்தரப்பில் அதிமுக சின்னத்தில் புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம் களத்தில் உள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு கதிர்ஆனந்த்தின் அப்பாவும், திமுக பொருளாளருமான துரைமுருகன் இல்லத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது, கழிசடை அரசியல் வாதிகள் என் மகன் வெற்றி பெற்றுவிடுவான் என எண்ணி வருமானவரித்துறையை ஏவியுள்ளார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு நரியான திமுக அஞ்சாது என்றார்.


இதற்கு பதிலளித்த ஏ.சி.சண்முகம், எனக்கும் இந்த ரெய்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. என்னை சீண்டினால் அவர் ஒரு மாதத்துக்கு தூங்க முடியாது. அவருடைய சொத்துக்கள் எங்கங்கு உள்ளது என்பது எனக்கு முழுதும் தெரியும் என மிரட்டுவது போல் தகவல் கூறினார். அப்போதே திமுக பிரமுகர்கள் துரைமுருகனிடம், நம்மாளுங்க யாரோ சரியா சண்முகத்திடம் உங்களைப்பற்றி கூறியுள்ளார்கள் என சிலரின் பெயர்களை சொல்லியுள்ளார்கள். இதன் பின்னால் சாதி பாசம் மட்டும்மல்ல பணமும் விளையாடுகிறது என தகவல் சொல்லியுள்ளனர். அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

 


இன்று ( ஏப்ரல் 1 ) ந்தேதி நடைபெறும் ரெய்டு துல்லியமாக நடத்தப்படுகிறது.  தேர்தலுக்கான பணம் எங்கங்கு துரைமுருகனால் தந்து வைக்கப்பட்டுயிருந்தது என்பதை சரியாக வருமானவரித்துறைக்கு போட்டு தந்துள்ளனர். இந்த தகவல் மாவட்ட நிர்வாகிகள் சிலருக்கும், அவருடனே உள்ள, அவரது ஆதரவாளர்கள் வெகு சிலருக்கு மட்டும்மே தெரிந்தது, வருமானவரித்துறைக்கு தெரிந்தது என்றால், தனது கட்சியை சேர்ந்த, தன்னால் வளர்த்துவிடப்பட்ட, தனது ஆதரவாளர்கள் போல் நடிப்பவர்கள் தான் தெரிவித்திருக்க வேண்டும் என துரைமுருகன் தரப்பு சந்தேகப்படுகிறது.

 


இதுப்பற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, துரைமுருகனை பழிவாங்குவதாக நினைத்து, கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்கள். இந்த துரோகத்தை யார் செய்தார்கள் என்பது கிட்டதட்ட கட்டறிந்துவிட்டார், அண்ணா, அண்ணா எனச்சொல்லிக்கொண்டே குழிபறித்துள்ளார்கள். இந்த துரோகத்துக்கான விலை நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்