கடலூர் மாவட்டம், வடலூர் அருகே அமைந்துள்ளது நெய்வேலி வட்டம். இங்கு, 29 வது வட்டத்தில் உள்ள ரவுண்டானாவில் இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மின்சாரம் செல்ல, பிரேக்கர் பெட்டி ஒன்று ஹைமாஸ் விளக்கு கம்பத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 29 வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஹைமாஸ் விளக்கு கீழே கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். மது போதையில் ஆசாமி ஒருவர் பட்டப் பகலில் கொளுத்தும் வெயிலில் மின்சாரம் செல்லக்கூடிய ஹைமாஸ் விளக்கின், பிரேக்கர் பெட்டி மீது ஏறி படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் அதிர்ச்சியில் மின்சாரம் செல்லும் ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமியை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரேக்கர் பெட்டியில் படுத்துக்கொண்டு ஹைமாஸ் விளக்கின் கம்பத்தின் மீது கால்மேல் கால் போட்டுக்கொண்டு போதை ஆசாமி தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் போதை ஆசாமி தூங்கிக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருசக்கரத்தில் சென்ற நபர் நெய்வேலி வட்டம் 29 ரவுண்டான வழியாக செல்கிறார். அப்போது, அடிக்கும் வெயிலில் போதை ஆசாமி மெய் மறந்து ஆபத்தான நிலையில் மின்சாரப் பெட்டியின் மீது தூங்கிக் கொண்டிருக்கிறார். வீடியோவில் சட்டையை பிரேக்கர் பெட்டி மீது போட்டுவிட்டு போதை ஆசாமி அதன்மேல் படுத்துக்கொண்டு, காலைத்தூக்கி ஹைமாஸ் விளக்குக் கம்பத்தின் மேல் வைத்துக்கொண்டு உறங்குகிறார். தலைக்கேறிய போதையில் இருந்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் எச்சரித்தும் கண்டுக்கொள்ளாமல் தூங்கியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், போதை ஆசாமிகளின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டு கொள்வது இல்லை என்று நெய்வேலி பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மின்சாரம் செல்லக்கூடிய பிரேக்கர் பெட்டி மீது ஏறி கால் மேல் கால் போட்டு போதை ஆசாமி தூங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.