Published on 21/03/2019 | Edited on 21/03/2019
தஞ்சையில் இன்று திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அதற்காக நகர் முழுவதும் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

தஞ்சை ரயிலடி அருகே வரிசையாக திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு அதிமுக மற்றும் தமாகா வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு எம்ஜிஆர், ஜெ. சிலைகளுக்கு மாலை அணிவிக்க மா. செ. வைத்திலிங்கம் எம்பி தலைமையில் வந்தனர். அப்போது சிலையின் கீழே ஊன்றப்பட்டிருந்த திமுக கொடிகளை அதிமுக தொண்டர்கள் பிடிங்கி கீழே போட்டனர். அதன் பிறகு வேட்பாளர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

திமுக கொடி பிடிங்கிய தகவல் திமுகவினருக்கு தெரிந்ததால் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.