தமிழகத்தில் தற்போதைய பரபரப்பான செய்தி குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது தான்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதைப் பொருளை லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்குள் விற்பனைக்கு அனுமதி அளித்ததாக எழுந்த புகாரில் காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர் பெயர் வரை பேசப்பட்டு வந்தது.
இந்த பிரச்சனைக்கு பிறகு எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எந்த கூட்டத்தில் பேசினாலும் குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று அமைச்சர் பெயரை சொல்லி வந்தார். இந்த நிலையில் குட்கா வழக்கு ஆவணங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் விடுபட்டிருந்தது. திட்டமிட்டு பெயரை நீக்கிவிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் கொஞ்ச நாட்களால் இந்த பிரச்சனையை மறந்திருந்த எதிர்கட்சிகள் மீண்டும் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
நேற்று புதுக்கோட்டையில் குட்கா வழக்கு சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடப்பட் டுள்ளதால் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகவேண்டும் என்று கூறி திமுக மாசெ க்கள் (பொ) தெற்கு ரகுபதி எம்எல்ஏ, வடக்கு செல்லப்பாண்டியன் தலைமையில் திலகர் திடலில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் இலுப்பூரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஏளமாக குவிந்தனர். தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி தலைமையில் அமைச்சர் வீட்டுக்குச் செல்லும் வழி எங்கும் போலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஏன் இந்த திடீர் பாதுகாப்பு என பொதுமக்கள் குழப்பமடைந்திருந்த நிலையில் காலை 9 மணி முதல் திமுகவினர் இலுப்பூர் தாலுகா அலுவலகம் அருகே குவியத் தொடக்கினார்கள். சுமார் 11 மணிக்கு மாசெ க்கள் பொறுப்பு ரகுபதி எம்எல்ஏ, செல்லப்பாண்டியன், மெய்யநாதன் எம்எல்ஏ, தென்னலூர் பழனியப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள்.. முன்னால் செல்ல.. பதவி விலகு.. பதவி விலகு.. என்ற பதாகைகளுடனும் முழக்கத்துடனும் சுமார் 1500 பேர் பேரணியாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு நோக்கி செல்ல பேருந்து நிலையம் அருகே அனைவரையும் கைது செய்தனர் போலிசார்.
அப்போது பேசிய ரகுபதி எம்எல்ஏ.. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கிலிருந்து குற்றவாளி என்பதை நிருபிக்க வேண்டும். ஆனால் பதவியை விட அமைச்சருக்கு மனமில்லை.. ஆளும் செயல்படாத அரசுக்கும் பதவியை விலக்க முடியவில்லை. அதனால் தான் இந்த போராட்டம். நாங்கள் வருவது தெரிந்ததால் அமைச்சர் வீட்டுப்பக்கமே வரவில்லை என்றார்.
மேலும் திமுக வினர் இந்த போராட்டம் இன்றோடு முடியாது. பதவி விலகும் வரை அல்லது பதவி பறிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
திமுகவினர் தனது வீட்டை முற்றுகையிட முயன்ற நேரத்தில் அமைச்சர் வஜயபாஸ்கர் வழக்கம் போல ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடியில் மாவட்ட ஆட்சியருடன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து ரசித்துக் கொண்டிருந்தார்.