திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுகவினர்கள் போட்டியின்றி இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு மெரினாவில் அவரது உடலை அடக்கம் செய்ய இடம் தர அதிமுக அரசு மறுத்துவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்திரவின் பேரில் தலைவரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மறுத்த அதிமுக அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, திமுக இயக்குனர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சேவுகம்பட்டி, பச்சமலையான்கோட்டை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜினாமா செய்துள்ளனர். இது திமுகவிற்கு நல்ல செல்வாக்கை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று 11.8.2018 சனிக்கிழமை, திமுக முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி சொந்த தொகுதியின் தலைமையிடமான ஆத்தூரில் நடைபெற்ற, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ஆத்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் தேவராஜ் என்பவரும், அதே கட்சியை சேர்ந்த, ஆத்தூர் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணிராஜ் ஆகியோர் போட்டியிட்னர். இதில் மொத்தமுள்ள 11 இயக்குனர்களில் திமுக இயக்குனர்கள் 4 பேர் உட்பட 10 கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 4 திமுக இயக்குனர்களின் பேராதரவுடன் அதிமுக வேட்பாளர் தேவராஜ் தலைவராக வெற்றி பெற்றார். அவர் தன்னை வெற்றிபெற வைத்த திமுக இயக்குனர்களுக்கு கோடானகோடி நன்றியை தெரிவித்தார்.
தேவராஜை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றொரு வேட்பாளர் அந்தோணிராஜ் 2 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு அவரது உடலை அடக்கம் செய்ய இடம் தர மறுத்த அதிமுக அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க திமுக இயக்குனர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த தொகுதியில் கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாமல், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளது திமுக அடிமட்ட தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆத்தூர் தொகுதியை பொருத்த வரை ஆண்டவனை கண்டவனும் இல்லை. ஐ.பியாரை வென்றவனும் இல்லை அப்படி தொகுதி மக்கள் மத்தியில் பேச்சும் இருந்து வருகிறது அதுபோல் தொகுதி மக்களும் ஐ.பி. மீது உயிரையை வைத்துள்ள வாக்காள பெருமக்கள் இருக்கிறாங்க அப்படி இருக்கும் போது திமுகவில் சில உ.பி.கள் காசுக்காக கட்சியை அடகு வைத்து வருவர்கள் மீது அண்ணன் ஐ.பி.கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேச்சும் அடிபட்டு வருகிறது.