Skip to main content

தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர் மாற்றம்....

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க. உட்பட போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். இக்கூட்டணியில் உள்ள கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி. 

 

dmk

 

இதற்கு நாமக்கல் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ER.ஈஸ்வரன் தான் வேட்பாளர் என்றும்  அவர் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என தொடர்ந்து கூறி வந்தனர். 


இந்நிலையில் இன்று ஈரோட்டில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முடிவில் நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க. வேட்பாளர்  ஏ.கே.பி.சின்ராஜ் என்று கட்சி செயலாளரான ஈஸ்வரன் அறிவித்தார். கொ.ம.தே.க.வேட்பாளர் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவார் என்றும் கூறினார் மேலும் கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதற்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடப் போவதாகவும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 
ஈஸ்வரன் தான் வேட்பாளர் என்று அக்கட்சி மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் நம்பி வந்த நிலையில் அதிரடி திருப்பமாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பிணர் நாமக்கல் சின்ராஜ் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் நாமக்கல்லில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபராவார். 

 

 

 

சார்ந்த செய்திகள்