Skip to main content

கஜா புயலால் இறந்ந 89  பேருக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மோடி  தமிழகத்திற்கு வர என்ன தகுதி இருக்கு?  வைகோ 

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.  அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியின்  காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்திலும்,  ஆண்டிபட்டி சட்டமன்ற திமுக வேட்பாளர் மகாராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட வலியுறுத்தி ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு மிக பிரமாண்டமாக கூடியிருந்த வாக்காள மக்கள் கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

 

e


அப்போது வாக்காள மக்களிடம் பேசிய வைகோ,    ‘’17வது நாடாளுமன்ற தேர்தலும்,  18 சட்டசபை இடைத்தேர்தலும் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாசிச வெறியாட்டம் போன்ற ரத்தக்களறிகளை ஏற்படுத்தும் பாஜக அரசுக்கு விடை கொடுக்கும் தேர்தலாக அமைந்துள்ளது. 
தமிழக மக்கள் எந்தக் கோவிலுக்கும் எந்த பள்ளிவாசலுக்கும் எந்த ஆலயங்களுக்கும் சென்று வழிபட உரிமை இருக்கிறது. அதற்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜாதி, இன, மத மொழியற்ற  நல்ல நாகரீகத்தை கொண்டது. இதனை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல வழிகளிலும் இந்த நரேந்திர மோடி திட்டம் தீட்டி சதி செய்து வருகிறார்.  இரண்டே கால் லட்சம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெற்றும், பல கோடி மக்கள் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் நோக்கத்துடனும் இடுக்கி அணையை உடைக்கும்  நோக்கத்துடன், இங்குள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.

 

முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் அனுமதி வழங்கி இருக்கிறார் மோடி.

 

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு காவிரியில் மேகதாது அணை கட்ட மறைமுகமாக உத்தரவை பிறப்பித்து விட்டு, கபட நாடகம் ஆடி வருகிறது.  இதன் மூலம் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இதனால் தஞ்சை தரணி பஞ்ச பிரதேசமாக மாறும். கஜா புயலில் 89 தமிழர்கள் இறந்தபோது ஒரு வருத்தமோ ஒரு இரங்கல் அறிக்கை கூட விடாத மோடிக்கு தமிழக வருவதற்கு என்ன தகுதி இருக்கு.

 

அந்த கஜா புயால் 1 1/2 கோடி தென்னை மரங்கள் அழிந்து போய்விட்டது.  அந்த அளவிற்கு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  அதற்காக  25,000 கோடி ஒதுக்கினாலும் நிவாரணத்தை சரி செய்ய முடியாது.    அப்படி இருக்க அரசு கேட்ட நிவாரணத் தொகையில் 2% மட்டுமே கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் அமைய வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் அதிமுக அரசின் கமிஷன் பேர  கெடுபிடியால் வேறு மாநிலத்துக்கு சென்று விட்ட காரணத்தால் 80 லட்சம் இளைஞர்கள்                                                                                                                                         வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.   விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிகளை தள்ளுபடி செய்கிறது.

 

ஆணி கூட செய்யத் தெரியாத அம்பானியுடன் மோடி இணைந்து கொண்டு 526 கோடிக்கு வாங்க வேண்டிய ரபேல் போர் விமானங்களை 1626 கோடிக்கு பேரம் பேசி ஊழல் செய்துள்ளார்.  ராகுல் காந்தியின் தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூபாய் 2000  வீதம் வருடத்திற்கு ரூபாய் 72 ஆயிரம்                                                                                                                                 கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்கள். ஆனால் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இத்திட்டம் சாத்தியமே என்று கூறியுள்ளார்.

 

  ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் பள்ளிக்கல்வி மாநிலத்தின் உரிமை.    விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அமைப்பதற்கு ராகுலும் உடன்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.


பாசிச மனப்பான்மை கொண்ட மோடியை தமிழ்நாட்டில் நலத்திட்டங்கள் வழங்க வரும்போது கருப்புக்கொடி காட்டி எதிர்த்த நாங்கள், இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது ஜனநாயக முறை என்பதால் கருப்புக் கொடி காட்டப் போவதில்லை. வழக்கை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.    தீர்ப்பளிக்க வேண்டிய நீதிபதிகள் நீங்கள் என்று கூறினார்
.

அதைத் தொடர்ந்து தேனியில் நேரு சிலை முன்பு  பேசிவிட்டு பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளரான சரவணகுமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கும் வாக்கு சேகரித்து  பேசினார். இக் கூட்டத்தில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,  பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் செல்லப் பாண்டியன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்