Published on 22/10/2018 | Edited on 22/10/2018

இயக்குநர் சுசிகணேசன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி எழுத்தாளர் லீனா மணிமேகலை மீ டூ ஹேஷ்டேக்கில் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து சுசிகணேசன் அது பொய் அது அப்படி உண்மையாக இருந்தால் என்னை இந்த இடத்திலேயே தூக்கிலிடுங்கள் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அதற்கான மறுப்பையும் வெளியிட்டார். தற்போது லீனா மணிமேகலையிடம் ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.