Skip to main content

நிலக்கோட்டை தொகுதியை  குறிவைக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் பேத்தி ஜான்சிராணி! 

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நிலக்கோட்டையில் இருக்கும்  கொங்கு  குளத்தை தூர் வாரும் பணி தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்தது. மகிளா காங்கிரஸ் சொந்த நிதியில் நடைபெறும் இந்தப் பணியினை முன்னாள் நிலக்கோட்டை எம்எல்ஏ பொன்னம்மாள் பேத்தியும் மகிளா காங்கிரஸ் தலைவருமான  ஜான்சி ராணி துவக்கி வைத்தார்.  

 

w

 

 முன்னதாக பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத் தலைவர் அப்துல் கனி ராஜா, சதீஸ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரணியாக குளத்தை நோக்கி நடந்து வந்தனர்.  தாலுகா அலுவலகம் அருகே  வரும் போது திடீரென ஊர்வலத்தின் நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஜான்சிராணி பேசத் தொடங்கிய போது....இதுவரை பெரும் தலைவர்  காமராஜருக்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை.  அதேபோல் நிலக்கோட்டை தொகுதியில் எனது பாட்டிக்கு பின்னர் மக்களுக்கு  யாரும் எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை.

 

d


 இனிவரும் காலங்களில்  நல்ல ஒரு முடிவு எடுங்கள் என்று பேசினார்.  அதன் பின் குளத்தில் பொக்லைன் வண்டிக்கு கொடியை அசைத்தவர் அதன் மீது ஏறி  நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு  தமிழகத்தில் 76 இடங்களில் தூர்வாரும் பணி காங்கிரசால் மேற்கொள்ளப்படுகிறது.

 

 குளங்களை தூர் வாருவதற்கு மகிளா காங்கிரஸ் பெண்களிடமே காசு இருக்கும்போது தமிழக அரசாங்கத்திடம் காசு இருக்காதா? என்று கேள்வி எழுப்பினார்.   இருப்பினும்  தூர் வாரும் பணிக்கு ஜான்சிராணி நிலக்கோட்டையை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் மீண்டும் நிலக்கோட்டை தொகுதியை பெறுவதில் கவனம் செலுத்துகிறாரோ? என்ற  என்ற எண்ணம் கதர்சட்டைகள்  மத்தியில் ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்