திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், குருட்டு அதிர்ஷ்டத்தால் ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். இவர்கள் காணாததை கண்டுவிட்டார்கள். குருட்டு அதிர்ஷ்டம் கோபுரத்தில் எல்லாம் உட்கார்ந்திருககிறார்கள். அவர்கள் கீழே விழும் வரை ஆட்டம் இருக்கும். ஆட்டம் ஒயப்போகும் நேரம் நெருங்கிவிட்டது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என பேரவையைக் கூட்டி 110 விதியின்கீழ் அறிவித்த ஒரே முதல் அமைச்சர் பழனிசாமிதான். தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்திருந்திருந்தால் காவிரி நீரை பெற்றுத் தந்திருக்கும்.
என்னிடம் இருக்கிற 21 எம்எல்ஏக்களும் தியாகம் செய்தவர்கள். ஜெயலலிதாவின் கட்சியை, தொண்டர்களை சரியாக புரிந்து செல்ல வேண்டும் என்பதற்காக, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சசிகலா இங்கு இல்லாத நிலையிலும் தொடர்கிறார்கள். அவர்கள் எதையாவது எதிர்பார்த்திருந்தால் அந்த கலெக்ஷன் நபர்களோடு போயிருக்கலாம். அரசாங்கத்தை நடத்துவோரிடம் இருந்திருக்கலாம்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவீதத்திற்கு மேல் எங்கள் பக்கம் உள்ளனர். தொண்டர்கள்தான் எங்களுக்கு முக்கியம். இன்னும் ஒரு மாதத்திற்குள் பாருங்கள் எங்கள் கட்சியில் எவ்வளவு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவிக்கப்போகிறேன். இவ்வாறு கூறினார்.