திருநங்கைகள் சுயதொழில் புரிய திருவல்லிக்கேணி துணை ஆணையர் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பெயரில் சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயரவும், அவர்கள் சுய தொழிலில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, சென்னை பெருநகர காவல்துறை தொடர்ந்து செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம், f-5 சூளைமெடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த்பாபு மற்றும் காவல் அதிகாரிகள் முயற்சியால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் கிருஷ்ணராஜ் கலந்துகொண்டு, பல்லாவரம் லயன்ஸ் கிளப் சார்பாக வழங்கப்பட்ட 80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு தள்ளுவண்டிகளை திருநங்கைகள் மோகனா, சபிதா ஆகிய இருவருக்கும் வழங்கினார். இதுவரை சூளைமேடு காவல் நிலைய போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய 8 தள்ளுவண்டிகளை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் லயன்ஸ் கிளப் தலைவர் அசோக், சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த்பாபு மற்றும் திருநங்கை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.