
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே உள்ள வருவாய்த் துறையினருக்கு சொந்தமான அரசு நிலத்தை 1938ஆம் ஆண்டு ஆபீஸர் ரெக்ரியேசன் என்ற பெயரில் கிளப் ஒன்று ஆரம்பித்து 1975ம் ஆண்டு பதிவு செய்து வைத்துள்ளனர். அரசுக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை உடனடியாக காலி செய்து தருமாறு கிளப் செயலாளரிடம் அரசு கூறி உள்ளது. கிளப் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் காலி செய்ய மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிளப் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்க முடியாமல் கிளப் உறுப்பினர்கள் தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து அரசு பக்கம் சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட 5 சென்ட் கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் கொண்டு இன்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.