Skip to main content

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Deepavali special buses first operation today!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்றுமுதல் (01/11/2021) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16,540 பேருந்துகளும், திரும்பி வர 17,719 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இன்றுமுதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 

மக்கள் திரும்பி வர ஏதுவாக நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 

பொதுமக்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பல விதமான கெட்டப்; யூடியூப் பார்த்து சம்பவம் செய்த இளைஞர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Thiruvarur teenager who was involved in theft sentenced to 3 years in jail

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்து விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும், தற்போதைய ஆய்வாளரான சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டி தனபுஷ்பத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார்.

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடங்கள் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றதை கண்டுபிடித்தார், பிறகு நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்தார்.

அப்போது திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை செயல்பட்ட விதம் பொதுமக்களே பாராட்டும் வகையில் இருந்தது. அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திருடினார், என்ன நடந்தது, எப்படி பிடித்தார்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா அப்போது கூறியது, “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார். அந்த வழக்கு நன்னிலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்துவந்தது.

இந்தநிலையில், திருட்டில் ஈடுபட்ட விஜய்க்கு இன்று 2.1.24ஆம் தேதி நன்னிலம் குற்றவியல் நடுவர் பாரதிதாசன், மேற்கண்ட குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10000 அபராத தொகையும், அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி கொடுத்த ஆய்வாளர் சுகுணாவையும், மற்றும் செந்தில்குமாரையும் அரசு வழக்கறிஞர் பாரட்டினார்.