Published on 27/11/2023 | Edited on 27/11/2023
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனே தகவல் அறிந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, தெப்பக்குளத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனே அகற்றக் கூறினார். அதனைத் தொடர்ந்து குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு மீன்களை அகற்றினர்.