கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்(38), குண்டலபாடி கிராமம் முக்கூட்டு முருகன்(43), அண்ணாமலைநகரை சேர்ந்த சுரேந்தர்(35), பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(44), ஆகிய 4 பேரும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக, காவல்நிலையங்களில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த11-ந் தேதி அண்ணாமலை நகர் காவல்துறையினர், இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதாலும், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அபினவ்ஸ்ரீ பரிந்துரையின் பேரில் மாவட்டஆட்சியர்(பொறுப்பு) ராஜகிருபாகரன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், 4 ரவுடிகளையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.