![Protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/QvRDDSJVIRveaXsnQrGADPP8L2pGSrkYxmROD6g-qb0/1545408120/sites/default/files/inline-images/02_7.jpg)
நெய்வேலி என்.எல்.சி. 3வது சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஒரு பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம், 3வது சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், என்.எல்.சி. நிர்வாகம் ஆரம்ப காலத்தில் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியது. வேலை வாய்ப்பு வழங்குவோம், இழப்பீடு தருவோம் என்று ஏமாற்றியது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கிறது. ஒரு பிடி மண்ணைக் கூட நாங்கள் தர தயாராக இல்லை என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
![nlc](http://image.nakkheeran.in/cdn/farfuture/bCWRjRFXKsVPvXR4sy2Gks9t8YluQjBC8iBL9L_aKck/1545408152/sites/default/files/inline-images/nlc%20222.jpg)
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாழ் கடலூர் மாவட்ட மக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.