Skip to main content

பாசன வாய்க்கால் கரையில் முதலை.... விவசாயிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Crocodile on the bank of the irrigation canal Farmers, the public ran screaming

 

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு கிராம வாய்க்காலில் முதலை ஒன்று படுத்துக்கிடந்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

 

அதையடுத்து, சிதம்பரம் வனசரகர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசியா, வனக்காவலர்கள் ஸ்டாலின், செந்தில், புஷ்பராஜ் உள்ளிட்டோர் முதலை பிடிக்கும் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாய்க்கால் கரையில் படுத்துக் கிடந்த 12 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை, வனத்துறையினர் முதலையின் கண் மீது ஈர சாக்கை நனைத்துப் போட்டு லாவகமாக அதனை பிடித்தனர். பின்னர் முதலையின் கால்களைக் கட்டி ஒரு வண்டியில் ஏற்றி, சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் விட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முதலையைப் பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்