சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கிடையில் மாணவர்களின் நலன்கருதி 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பாக நாளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய 11, 12ஆமே வகுப்பு பொதுத்தேர்வுகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 30 நிமிடங்கள் தாமதமாக காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
தற்போது வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாவும் நாளை நடைபெறும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.