உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
![corona virus- lockdown - mask issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/DX8spYpAzSmcw4YT8DUN7hUlEeAeMEsp4isHGE9scZI/1587124433/sites/default/files/inline-images/111111_275.jpg)
கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழி சமூக விலகலை கடைபிடிப்பதும், மாஸ்க் அணிவதும்தான் என்பதால் அரசு அதையே மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்கள் இதை முறையாக கடைபிடிப்பதில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ.100 அபராதம் என்று அம்மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.