
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 2,370 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 612 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்துத் தமிழகம் முழுவதும் இதுவரை 7,39,147 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 2,402ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,08,846 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,299 ஆக அதிகரித்துள்ளது.