Skip to main content

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனோ சோதனை நடத்தப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர், வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்கள் 10 - 15 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.

 

Corona test for devotees coming to Srirangam temple


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பக்தர்கள் நுழையும், கிழக்கு, வடக்கு, தெற்கு கோபுர வாசல்களில், காய்ச்சலை கண்டறியும் அதிநவீன தெர்மல் ஸ்கீரினிங் மீட்டர்களை கொண்டு பக்தர்களை பரிசோதனை செய்வது இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு கோயில்களில் முதல் முறையாக இந்த முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சோதனையில், காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக அங்கு தயார் நிலையில் இருக்கும் மருத்துவக் குழுவினரிடம் மேற் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு கரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

ஸ்ரீரங்கத்தில் பிரதமருக்கு இந்தியில் வரவேற்பு; வைரலாகும் புரோகிதர்களின் வீடியோ

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Priests write in Hindi on Srirangam Temple to welcome the Pm modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேஷ்டி சட்டை அணிந்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, ஹெலிஹாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். 

இதனிடையே ஸ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடியை, ஸ்ரீரங்கம் கோவில் தெருவில் புரோகிதர்கள் இந்தியில் எழுதி வரவேற்றிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.