Published on 29/04/2020 | Edited on 29/04/2020
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 121 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று 82 பேர் குணமடைந்து ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டோரில் சென்னையில் 94 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் சென்னையில் மொத்தமாக 767 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில் இன்று சென்னையில் 94 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்களில் சென்னையில் 197 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 922 பேர் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் இதுவரை 2,162 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.