Skip to main content

தொடர்ந்து எரியும் பெருங்குடி குப்பை கிடங்கு! போர்க்கால நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 


சென்னை, பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை தீ பிடித்து எரிந்து வருகிறது. இங்கு லட்சக்கணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். 


இதில், 12 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 300 பேர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 3 நாட்களுக்குப் பிறகு தீ கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பல அடி ஆழத்துக்குச் சென்றுள்ள தீ கங்குகளால் புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.


இந்நிலையில், சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு தீப்பற்றி எரிவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பலர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் இதை அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வலியுறுத்தியும் பெருங்குடி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு மையம் சார்பில் பெருங்குடி குப்பை கிடங்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டடத்திற்குத் தோண்டிய பள்ளத்தால் பக்கத்து வீடுகளில் பாதிப்பு; அதிகாரிகள் ஆறுதல்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Damage to neighboring houses due to the ditch dug into the building; Officers are comforted

சென்னையில் கட்டடம் கட்டுவதற்குப் பள்ளம் தோண்டப்பட்டபோது அருகில் இருந்த வீடுகளின் பின்பக்க சுவர்கள் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெருங்குடி பர்மா காலனி பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் பத்தாவது தெருவில் ஐந்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் நான்கு அடுக்கு கட்டடம் ஒன்று கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெசிபிகள் வரவழைக்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு வந்தன.

அப்பொழுது கட்டுமான பணி நடைபெற்ற ஒரு பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் மண் சரிவு ஏற்பட்டு இரண்டு வீடுகளின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அப்பகுதி  சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக வந்து ஆறுதல் தெரிவித்ததோடு, மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

பெருங்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; முதல்வர் பங்கேற்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 relief to the people affected by perungudi; Participation of Principal

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பெருங்குடி பகுதியில் ஏரிப்பகுதி ஒட்டிய சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பாய், பெட்ஷீட், 5 கிலோ அரிசி, ஆவின் பால் பவுடர் ஒரு கிலோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் சி.வி.கணேசன், சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.