மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி குமாி மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.
2016 நவமபா் 8 நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பை இழக்க செய்து நாடு முமுவதும் அதிா்வலையை ஏற்படுத்தினாா் மோடி. இதனால் நாடு முமுவதும் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளானாா்கள். இதில் பழைய ருபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ருபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளவும் பெறப்பட்ட அந்த 2000 ருபாய் நோட்டுகளை சில்லரையாக மாற்றவும் மக்கள் படாதபாடு பட்டனா்.
ஏடிஎம் சென்டா்கள் எல்லாம் பணம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. திருமணம் உட்பட பல சடங்கு நிகழ்சிகள் பணம் இல்லாமல் தடை பட்டதால் பலா் உயிாிழப்பு சம்பவங்களும நடந்தன. இதற்கு நாடு முமுவதும் எதிா்ப்பு கிளம்பியது.
இந்த சம்பவத்தை இன்று நாடு முமுவதும் காங்கிரசாா் கறுப்பு தினமாக கடைபிடித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினாா்கள். இதில் குமாி மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்டம் சாா்பில் மாவட்ட தலைவா் வழக்கறிஞா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகா்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் பிாின்ஸ் எம்.எல்.ஏ உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல் மேற்கு மாவட்டம் சாா்பில் ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ தலைமையில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆாா்ப்பாட்டம் நடந்தது. இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அழகியமண்டபத்தில் நூதன முறையில் ஆாா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.